'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து விஷால் ஆர்யாவை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார் . இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளின் போது வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாலா, சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் படத்துக்காக 60 நாட்கள் கால்சீட் கொடுத்து நடிக்கப்போகிறார் சூர்யா. இதற்கிடையே பிப்ரவரி 4-ஆம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வருகிறது.