அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ரைட்டர். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வருகிற 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திரைக்கு வருகிறது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. காவல்துறையில் பணிபுரியும் ரங்கராஜ் என்ற ரைட்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. மீசையில்லாத கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த டிரைலரில் ஒரு ரைட்டரின் வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பிராங்க்ளின் ஜாக்கப்.
காவல்துறை உயர் அதிகாரிகள் ரைட்டர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. அதோடு போலீசை பற்றி அவதூறு பரப்ப ஒரு கூட்டம் உள்ளது. காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம், மலிந்து கிடக்கும் மனித உரிமை போன்ற வசனங்கள் நிகழ்கால சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. டிரைலர் மொத்தமும் சமுத்திரக்கனி நிறைந்துள்ளார். படம் வெளியான பின் அவரது நடிப்பு இன்னும் பேசப்படும் என தெரிகிறது.