காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் |
தென்னிந்தியத் திரையுலகின் அழகான காதல் ஜோடி என கருதப்பட்டு கல்யாணமும் செய்து கொண்டு பலரையும் பொறாமைப்பட வைத்தவர்கள் நாகசைதன்யா - சமந்தார். சில வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு காதலும், கல்யாணமும் கசந்து இருவரும் பிரிந்தனர்.
சமந்தாவைப் பற்றி வரும் சில செய்திகளில் இன்னமும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் அது பற்றி சரியான பதில் ஒன்றைக் கொடுத்துள்ளார் சமந்தா.
“அது பற்றி பேசி முடித்துவிட்டேன் என நினைக்கிறேன். அது பற்றி பேசுவது முக்கியம், அதைப் பற்றி பேசியும் முடித்தேன். ஆனால், அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டியது அவசியமில்லை என நான் நினைக்கிறேன். மக்கள் ஒவ்வொருவருக்கம் பல வித கருத்துக்கள் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இன்னமும் காதலித்துக் கொண்டும், இருவருக்கும் இடையில் பரிவுடனும்தான் இருக்கிறோம். நாகரீகமான முறையில் மக்கள் அவர்களது வருத்தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.