இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கிர்த்தி ஷெட்டி. இந்தபடத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு நானியுடன் ஷ்யாம் சிங்கராய், சுதீர்பாபுடன் ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாளி, மிதுனுடன் மச்சர்ல நியோஜகவர்கம் மற்றும் லிங்குசாமி தெலுங்கில் இயக்கி வரும் படம் என நான்கு படங்களை கைவசம் வைத்தி ருக்கிறார்.
இந்தநிலையில் தெலுங்கில் நானி நடித்த மஜ்னு மற்றும் உய்யாலா ஜம்பாலா போன்ற படங்களை இயக்கிய விரிஞ்சி வர்மா அடுத்து தான் இயக்கும் படத்தில் கிர்த்தி ஷெட்டியை கதையின் நாயகியாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா இப்படத்தை தயாரிக்கிறார். இந்தபடத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக கிர்த்தி ஷெட்டிக்கு முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசியிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.