நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் படப் பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்த படத்திலும் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகனே நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பிப்ரவரி 17 என்பதால் பிப்ரவரி 18-ந்தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதே தேதியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் வெளியிட முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் விஜய் சேதுபதியும் - சிவகார்த்திகேயனும் ஒரேநாளில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.
இதற்கு முன்பு 2013ல் எதிர்நீச்சல், சூதுகவ்வும், 2016ல் ரெமோ, றெக்கை ஆகிய படங்கள் ஒரேநாளில் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயனின் படங்கள் ஒரேநாளில் வெளியாகின்றன.