பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் |
பவன் கல்யாண் நடிக்கும் தெலுங்கு படம் ஹரி ஹர வீரமல்லு. இந்த படத்தை கிரிஷ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகி இருந்தார். இன்னொரு ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குவதாக இருந்தது.
ஆனால் தற்போது ஜாக்குலினை அதிரடியாக படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இந்தியாவின் பிரபல மோசடி மன்னன் சுகேஷின் மோசடி வழக்கிற்குள் ஜாக்குலின் சிக்கி இருப்பதால், அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கும் என்பதால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இப்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.