இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாக உள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியூபில் வெளியிடப்பட்டது. நேற்று மாலையே வெளியாக வேண்டிய டிரைலர் தொழில்நுட்பக் கோளாறால் சில மணி நேரங்கள் கழித்து இரவில்தான் வெளியானது.
இருந்தாலும் டிரைலரைப் பார்க்க அதிக ஆர்வத்துடன் ரசிகர்கள் இருந்ததால் இரவு நேரத்திலேயே பல மில்லியன் பேர் டிரைலரைப் பார்த்தனர். அதனால், இன்று காலைக்குள் 4 மொழிகளில் சேர்த்து 15 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அதிகபட்சமாக தெலுங்கில் 7 மில்லியனைக் கடந்துள்ளது. ஹிந்தி டிரைலர் இன்றுதான் வெளியாக உள்ளது.