இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
'காவியத் தலைவன்' படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜெயில்'. இதில் ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார்,'பசங்க' பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் கதையை இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும், வசனத்தை பாக்கியம் சங்கம் எழுதியிருக்கிறார்கள். அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கொரோனா மற்றும் பைனான்ஸ் சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளிவைக்கப்பட்ட இப்படத்தை வரும் 9ந்தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவியது.
இந்நிலையில் ஜெயில் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று இயக்குனர் வசந்தபாலன் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், எத்தனை தடைகள் எத்தனை வேலிகள் எத்தனை இடையூறுகள்..... ஜெயில் என்று தலைப்பு வைத்ததாலா என்னவோ படாதபாடுயெல்லாம் பட வேண்டியுள்ளது. கோர்ட் வரை சென்று நல்ல நீதியரசர் தந்த தீர்ப்பால் எல்லா தடைகளும் நீங்கி டிசம்பர் 9 ம் தேதி ஜெயில் திரையரங்குகளில் வெளியாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.