பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் வசித்து வந்தாலும் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். சென்னையில் தான் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். அதன் பிறகே சினிமாவில் அறிமுகமானார்.
தனது கல்லூரித் தோழிகளுடன் இன்னமும் நட்பில் இருக்கிறார் கீர்த்தி. அவரது தோழி ஒருவருக்கு நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அப்போது கல்லூரித் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
முன்னணி கதாநாயகியாக உயர்ந்தாலும் தனது கல்லூரித் தோழிகளை மறக்காமல் அவர்களது குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஆச்சரியமான ஒன்று.
“திருமண ஓசைகள், சிரிப்பின் ஒலிகள் நிறைந்த ஒரு சந்தர்ப்பத்தை விட நண்பர்களுடன் சேர வேறு சிறந்த சந்தர்ப்பம் இல்லை,” என தனது தோழியர்களுடனான சந்திப்புப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.