Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரிக்கெட் படத்தில் இணைந்த கமல்ஹாசன்

01 டிச, 2021 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Kamalhaasan-joints-in-83-movie

1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றதை 83 என்ற தலைப்பில் திரைப்படமாக தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில் கபில் தேவ் பாத்திரத்தில் ரன்வீர் சிங்கும், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் ஜீவா மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். தீபிகா படுகோனே, இப்படத்தில் கபில்தேவின் மனைவியாக நடித்துள்ளார். கபீர்கான் இயக்கி உள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 24 அன்று வெளியாகிறது. இத்திரைப்படத்தினை தீபிகா படுகோனே, கபீர் கான், விஷ்ணு இந்தூரி, சஜித் நடியாவாலா, பாந்தோம் பிலிம்ஸ், 83 பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தில் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்சும் இணைந்துள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிடும் பணியில் இறங்கி உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் தமிழ்நாட்டு புரமோசன் பணிகளில் கமலும் இணைவார் என்று தெரிகிறது.

இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா போன்ற எண்ணற்ற மதங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய பல தரப்பட்ட மக்கள் வாழும் தேசத்தில், கிரிக்கெட் மற்றும் திரைப்படங்கள் மட்டுமே அத்தகைய தடைகளை தாண்டி, மக்களை உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கும் களமாக இருந்து வருகிறது.

இந்திய மக்கள் கொண்டாடும் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அற்புத தருணம் என்றால் 1983 இல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கோப்பையை வென்று மொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திய அழகான தருணம் தான். அதைத்தான் இந்த படம் மீண்டும் நிகழ்த்தி காட்டுகிறது.

படத்துடன் கமல்ஹாசனின் தொடர்பு வெறும் வர்த்தக காரணிகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை, அவருக்கும் இந்த படைப்பிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. கமல்ஹாசன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் சின்னமாக இருந்து வருகிறார். 83 திரைப்படத்தை பார்க்க, தமிழ்நாட்டில் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவைக்கும் ஒரு அருமையான காரணியாக கமல்ஹாசன் இருப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இன்று 'வலிமை' இரண்டாவது சிங்கிள் அப்டேட்?இன்று 'வலிமை' இரண்டாவது சிங்கிள் ... இயக்குனர் ஆனது எப்படி? - சண்டை இயக்குனர் சில்வா விளக்கம் இயக்குனர் ஆனது எப்படி? - சண்டை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in