ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
பிரபல சண்டை இயக்குநர் ஸ்டண்ட் சில்வா முதல் முறையாக இயக்கி உள்ள படம் சித்திரை செவ்வானம். சமுத்திரக்கனி, பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர். சாம் சி.எஸ்.இசை அமைத்துளார். ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் கே.ஜி.வெங்கடேஷ் பணிபுரிந்துள்ளனர். இயக்குனர் விஜய் கதை எழுதியுள்ளார். ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி. மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர். நாளை மறுநாள் (டிச 3) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குனர் சில்வா கூறுகையில், ‛‛என் சின்ன வயதிலிருந்தே என்னை இங்கிருப்பவர்கள் தான் என் கை பிடித்து அழைத்து சென்றிருக்கிறார்கள். நான் இயக்குநர் ஆக வேண்டும் என என்னை விட வெறியாக இருந்தவர் விஜய் தான். தலைவா படத்திலிருந்தே எனக்குள் ஒரு இயக்குநர் இருக்கிறார் என்று ஊக்கம் தந்து, என்னை இயக்குநர் ஆக்கும் வரை உடன் நின்றவர் விஜய் தான். படம் பார்த்து கண் கலங்கி என்னால் கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார்.
இந்தப்படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப்படம் போல் செய்து தந்தார் சமுத்திரகனி. அவரால் தான் இந்தப்படம் முழுமையாக வந்துள்ளது. பூஜாவை பார்த்தவுடன் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். கலைவாணியிடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார்.
ரீமா கலிங்கல் திரைக்கதை கேட்டார். ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். நன்றாக நடித்திருக்கிறார். மானசி 8 வயது பெண் கிளிசரின் போடாமலே அவளுக்கு அழுகை வருகிறது. சொல்லும் நேரத்தில் சிரிக்கிறாள் அவள் மிகப்பெரிய உயரத்தை தொடுவாள். என்னுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என்றார்.