எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
இந்திய கிரிக்கெட் அணி முதல் முதலாக ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையைக் கைப்பற்றிய 83வது வருட நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் '83'. ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் நேற்று காலை யு டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியானதுமே பலரும் அதைப் பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஹிந்தி டிரைலர் 24 மணி நேரத்திற்குள் 50 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த 'சூர்யவன்ஷி' டிரைலர் 24 மணி நேரத்தில் 42.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றதே சாதனையாகஇருந்தது.
'83' ஹிந்தி டிரைலர் தற்போது 50 மில்லியன் சாதனையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் டிரைலர் 19 லட்சம் பார்வைகள், தெலுங்கு 21 லட்சம், கன்னடம், மலையாளம் தலா 1 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளன.
83ம் ஆண்டு உலகக் கோப்பையை டிவியில் பார்த்த தலைமுறையினரும், அதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ள இன்றைய தலைமுறையினரும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாய் உள்ளனர்.