மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர் தோழி பலியானார். இவர் நடக்க முடியாத சூழலில் இரு ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். சமீபத்தில் நடக்க பயிற்சி எடுத்தவர், சில தினங்களுக்கு முன் சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றார். 4 மாதங்களுக்கு பின் பொது வெளியில் அவர் வந்தார். கையில் ஊன்றுகோல் துணையுடன் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய யாஷிகா : ‛‛இப்போது உடல்நிலை பரவாயில்லை. பழையபடி நடக்க முடியவில்லை என்றாலும் ஓரளவுக்கு நடக்க தொடங்கிவிட்டேன். முழுமையாக குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். பிஸியோ, உடற்பயிற்சி எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எவ்வளவு நாள் தான் படுத்த படுக்கையாக இருப்பது. ஒரு மைண்ட் சேஞ்சிற்காக கடை திறப்பு விழாவில் பங்கேற்றேன். இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ஒரு படத்தில் போலீசாக நடிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட விபத்தால் அந்த படப்பிடிப்பு அப்படியே நின்று உள்ளது. உடல்நிலை தேறிய பிறகு தான் அடுத்த படங்கள் பற்றி யோசிக்க முடியும்'' என்றார்.