கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? |
'ஒத்த செருப்பு' படத்திற்குப் பிறகு தமிழில் பார்த்திபன் இயக்கி வரும் படம் 'இரவின் நிழல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இருவரும் இணையும் முதல் படம் இது. 20 வருடங்களுக்கு முன்பு இருவரும் இணைந்து பணி புரிவதாக அறிவிக்கப்பட்ட 'ஏலேலோ' படம் நடக்காமல் போய்விட்டது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பார்த்திபன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அது குறித்து பார்த்திபன் டுவிட்டரில், “இரவின் நிழல்' - ஏ.ஆர்.ரஹ்மான் இசை ம்யூரல்! பின்னணி இசைக்காக அவர் குரலில் ஒரு ட்யூனை அனுப்பி என்னை எழுதச் சொன்னார். கேட்ட நொடி முதல் கிறங்கிக் கிடக்கிறேன் high-யில். இறங்கி வந்து அந்த abstract tune-க்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஒரு வாரம் மூழ்க, பதிவும் செய்யப்பட்டது.
சங்குக்குள் அடக்கப்பட்ட கங்கை போல், முழு படத்தின் வீரியத்தையும் ஒரு பாடலில்.சிலிர்த்து சிறகடித்து பறக்கிறேன் பரவசத்தில். ரசித்து சமைத்தால் தானே இலைக்கு(திரைக்கு)வரும்போது ருசிக்கும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
'ஒத்த செருப்பு' படம் போலவே ஒரு புதுமையான முயற்சியில் இந்த 'இரவின் நிழல்' படத்தைப் பார்த்திபன் எடுத்து வருவதாகத் தெரிகிறது.