அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
சென்னை: காடுகளையும், பழங்குடியினத்தவரின் சிறப்பையும் பேசும் வனம் படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது. தப்புத்தண்டா படத்தை இயக்கிய ஸ்ரீகந்தன் ஆனந்த் இயக்கியுள்ள படம் வனம். எட்டு தோட்டாக்கள், ஜீவி படப்புகழ் வெற்றி, நாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய, ரான் ஈதன் யோஹன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகிறது. மாணவர் விடுதி அறையில் நிகழும் மர்ம தற்கொலைகளும், அதன் பின்னணியில், ஜமீன்தாரின் வெறியாட்டத்தோடு, அமானுஷ்ய சக்திகளையும் இணைத்து கதைக்களம் அமைத்து உள்ளனர். குறிப்பாக, காடுகளின் முக்கியத்துவத்தையும், பளியர் என்ற பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் இப்படத்தில் எடுத்துரைத்துள்ளது சிறப்பம்சம்.
முக்கியமாக படத்திற்காக, இரண்டு மாதம் கடுமையாக உழைத்து, படப்பிடிப்பு தளத்தை கச்சிதமாக தேர்வு செய்து உள்ளனர். படத்தின் பெரிய பலமே ஒளிப்பதிவு தான். விக்ரம் மோகனுக்கு இது முதல் படம். தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளார். காட்டுக்குள்ளேயே சென்று வந்த பிரமிப்பை, வனம் படத்தை பார்க்கும் போது உணரலாம். பின்னணி இசை படத்திற்கே உரிய மிரட்டல். படத்தை கோல்டன் ஸ்டார் ஸ்டூடியோ சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே.பி.அமலன், ஜே.பி.அலெக்ஸ் தயாரித்துள்ளனர்.