திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் |
ஆந்திர மாநிலத்தில் ஆந்திரப் பிரதேச சினிமாஸ் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2021ஐ கொண்டு வந்துள்ளது மாநில அரசு. இதன் மூலம் சினிமா தியேட்டர் டிக்கெட்டுகளை அரசு சார்புடைய ஆந்திர சினிமா மற்றும் தியேட்டர் வளர்ச்சிக் கழகம் மூலம் ஆன்லைனில் விற்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்து சில மாதங்களுக்கு முன்பே அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தெலுங்கு சினிமாவில் தற்போது பல பான்-இந்தியா படங்கள் பல கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது. அந்தப் படங்கள் இந்த குறைந்த கட்டணங்களில் வசூலை அள்ள முடியாது. எனவே, தெலுங்கு திரையுலகத்தினர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். அதே சமயம் ஆன்லைன் மூலம் அரசு தரப்பில் டிக்கெட் விற்பனை ஒழுங்குபடுத்தப்படுவதை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
தெலுங்கு திரையுலகத்தின் மூத்த நடிகரான சிரஞ்சீவி, முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “ஒளிவு மறைவற்ற ஆன்லைன் டிக்கெட் விற்பனை சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. அதே சமயம், தியேட்டர்கள் செயல்படுவதற்கும், திரையுலகத்தை நம்பி பல குடும்பங்கள் இருப்பதாலும் குறைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்களை ஜிஎஸ்டிக்கேற்ப மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று மாற்றியமைக்க வேண்டும். இதை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஊக்கம் இருந்தால் மட்டுமே தெலுங்கு திரையுலகம் வாழ முடியும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.