சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளிவந்தது. படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் திருப்தியளிக்கவில்லை என்பதே பலரது கருத்து. அதை நிரூபிக்கும் வகையில் படம் வெளியான 21 நாட்களில் ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட்டுவிட்டார்கள். ரஜினிகாந்த் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என திரையுலகத்தில் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
புதிய படங்கள் அதிலும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் இப்படி 21 நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாது தியேட்டர் வசூலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தியேட்டர்காரர்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் நெகட்டிவ் கருத்துக்களை மறக்கடிக்கும் விதத்தில் ரஜினியின் பிறந்தநாளுக்கு புதிய பட அறிவிப்பு வெளியாகுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரத்தில் ரஜினியின் பிறந்தநாள் வர உள்ளது.
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் போட்டியில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், நெல்சன் ஆகியோர் உள்ளதாகத் தெரிகிறது. இதில் பேட்ட இயக்குனரே முந்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.