24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் | மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' | 'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' |
மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட் படத்திலும் தற்போது கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. இந்த படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் அனுபம்கெர், ‛‛நான் நடிக்கும் 522வது படம் நயன்தாராவின் கனெக்ட். நல்ல கதையில், பிடித்தமான குழுவுடன் இணைந்திருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா, அஸ்வின் சரவணன் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். அதோடு, விக்னேஷ்சிவன், அஸ்வின் சரவணனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.