புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திருமண உறவு பிரிவுக்குப் பின் பல புதிய படங்களில் நடிக்க அடுத்தடுத்து சம்மதித்து வருகிறார். தற்போது சர்வதேச அளவில் தயாராக உள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்பது படத்தின் பெயராம். பிலிப் ஜான் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார்.
திமெரி என்-முராரி என்ற இந்திய எழுத்தாளர் எழுதியுள்ள நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாம். இருபால் சேர்க்கை உணர்வு கொண்டு ஒரு தமிழ்ப் பெண்ணாக சமந்தா இப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.
'த பேமிலி மேன் 2' இணையத் தொடருக்குப் பிறகு சமந்தாவைத் தேடி நிறைய பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சர்வதே அளவில் உருவாக உள்ள படத்தில் அவர் நடிக்க இருப்பதற்கான வாய்ப்பும் கிடைக்க அந்த இணையத் தொடர்தான் காரணம் என்கிறார்கள்.
இது பற்றிய அமெரிக்க இணையதள செய்தி ஒன்றைப் பகிர்ந்து, “முற்றிலும் புதியதொரு உலகம்” என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து சமந்தா, “'அரெஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' படத்தில் இடம் பெறுவதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. அனு-வாக இருப்பதற்கு என்னைத் தேர்வு செய்ததற்கு நன்றி பிலிப் ஜான் சார். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.