அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ரசிகர்களுக்கு இரண்டு விதமான ஏரியாக்களில் தங்கள் ஹீரோக்களை தேடுவது வழக்கம். ஒருவர் சினிமா ஹீரோ.. இன்னொருவர் கிரிக்கெட் ஹீரோ.. அதேசமயம் சினிமா ஹீரோக்களும் விரும்பி ஆராதிப்பது கிரிக்கெட் வீரர்களைத்தான். அந்தவகையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இந்திய அணியின் முன்னாள் ஸ்டார் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கை சமீபத்தில் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
“டர்பன் நகரில் நடைபெற்ற போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்து உலக சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை சந்தித்ததும் அவருடன் சில மனித்துள்ளிகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததும் என்னுடைய அதிர்ஷ்டம்.. உங்களுடைய அதிதீவிர ரசிகன் நான்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் டொவினோ தாமஸ்.