சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தொண்ணூறுகளில் மலையாள சினிமாவின் ஆக்சன் கிங்காக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களுக்கு முன் அரசியலில் இறங்கியதால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்தநிலையில் மீண்டும் நடிப்புக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அந்தவகையில் கடந்த வருடம் கொரோனா முதல் அலை துவங்குவதற்கு சற்று முன்னதாக வெளியான 'வரனே ஆவிஷ்யமுண்டு' படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் தயாராகி வரும் தமிழரசன் உள்பட நான்கு படங்களில் நடித்துள்ளார் சுரேஷ்கோபி..
கொரோனா இரண்டாவது அலை முடிந்து கேரளாவிலும் இயல்புநிலை துவங்கிய நிலையில் அவர் நடித்துள்ள காவல் என்கிற படம் வரும் நவ-25ம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் படங்கள் மூலம் சுரேஷ் கோபியின் இமேஜை தூக்கி நிறுத்திய கதாசிரியரும், நடிகருமான ரெஞ்சி பணிக்கரின் மகன் நிதின் ரெஞ்சி பணிக்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய மம்முட்டி நடித்த கசபா என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.