அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
திரைப்படங்கள் ஒரு பக்கம் ஓடிடி பக்ககம் சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஓடிடி தளத்திற்கென்றே படங்களும் தயாராகிறது. சமுத்திரகனி நடித்த விநோதய சித்தம் படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் சித்திரை செவ்வானம் என்ற படம் ஓடிடி தளத்திற்கென்று தயாராகி உள்ளது.
இதனை அமிர்தா ஸ்டூடியோவடன் இணைந்து தனது பிக் திங் ஸ்டூடியோ சார்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரித்துள்ளார். ஸ்டன்ட் இயக்குனர் சில்வா இந்த படத்தை இயக்கி உள்ளார். சமுத்திரகனியுடன், பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர், சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இது தந்தை, மகளுக்கு இடையிலான உறவை பற்றியது. தந்தையாக சமுத்திரகனியும், மகளாக பூஜா கண்ணனும் நடித்துள்ளனர். நடிகை சாய் பல்லவியின் தங்கை தான் பூஜா ஆவார். இவர் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். வருகிற டிசம்பர் 5ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.