'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
நடன பயிற்சியாளராக இருந்த கோகுல், மானாட மயிலாட நிகழ்சி மூலம் புகழ்பெற்றார். அம்புலி, ஆ, ஜம்புலிங்கம், மகளிர் மட்டும், ஐரா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். கோகுல்நாத் யூனிக் டேலண்ட் அகாடமி என்கிற பெயரில் ஒரு பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அதில் பல குழந்தைகள் பல கலைகளில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கோகுல்நாத்தும், அவர் நடத்தி வரும் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்களும் 15 கின்னஸ் சாதனைகள் படைத்துள்ளார். இதில் கோகுல்நாத் மட்டும் 4 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். கின்னஸ் புத்தகத்தில் தனது பெயர் இடம்பெற்று உள்ளதை வீடியோவாக பதிவிட்டு உள்ளார்.
'கின்னஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம் பெற்றுள்ளதை பார்த்து சிறு குழந்தையை போல் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது” என குறிப்பிட்டிருக்கிறார்.