படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் |

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல மார்க்கெட்டை உருவாக்கி தந்தன. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான காடன் படம் கலவையான விமர்சங்னகளை பெற்றது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து எப்.ஐ.ஆர் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளன. எனவே படத்துக்கு போட்டி உருவாகி உள்ளது. படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட 30 கோடிக்கு கேட்டுள்ளனர். ஆனால் விஷ்ணு விஷால் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வேன் என்று மறுத்திருக்கிறார். ஹிந்தி டப்பிங் உரிமை மட்டும் 8 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம்.




