கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்” | எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம் | ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி | 'மனதை திருடி விட்டாய்' நாராயணமூர்த்தி காலமானார் | தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் |
சூர்யா - பாண்டிராஜ் கூட்டணி பசங்க 2 படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4 ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார் .
இந்த நிலையில் நேற்று எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டது அப்படக்குழு. அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு காரணம் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பு கோலமாவு கோகிலா, டாக்டர் என சில படங்களுக்கு பாடல் எழுதியுள்ள சிவகார்த்திகேயன், சூர்யாவின் இந்த படத்திற்கும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். விரைவில் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளது.
பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அதன்பிறகு அவர் இயக்கத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.