மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் |
நடிகர் அருண் விஜய் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவற்றில் பார்டர், அக்னிச்சிறகுகள், சினம், பாக்ஸர் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது தனது மைத்துனரும், இயக்குனருமான ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார் அருண் விஜய். பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 40 பேர் உடன் இணைந்து தானும் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்.
அருண் விஜய் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர். ரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும் ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரசிர்களின் இந்த செயலுக்கும், அன்புக்கும் நன்றி'' என்றார்.