‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி(84) வயது மூப்பு காரணமாக காலமானார். நாகர்கோவில், பார்வதிபுரத்தில் பிறந்தவர் கே.கே.எஸ்.மணி எனும் பாரதி மணி. இளமை காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். ‛‛பாபா, பாரதி, ஆட்டோகிராப், ஐ'' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் 'பாரதி' மணி என அழைக்கப்பட்டார்.
'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தனது புத்தகத்திலிருந்த கட்டுரைகளும், நேர்காணல்கள், குறிப்புகள் இவைகளையெல்லாம் சேர்த்து ஒரு முழுத்தொகுப்பாக “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். சென்னையில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் நேற்று நள்ளிரவு காலமானார்.