ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் தெலுங்கு ‛பேபி' | லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா | இன்னும் ஏழே நாளில் படப்பிடிப்பு முடிகிறது: 'புஷ்பா 2' விழாவில் தயாரிப்பாளர் கொடுத்த 'குட் பேட் அக்லி' அப்டேட் | ராம் சரண் 16வது பட படப்பிடிப்பு மைசூரில் துவக்கம் | அல்லு அர்ஜுனிடம் இயக்குனர் நெல்சன் வைத்த கோரிக்கை | ரிஷப் ஷெட்டியின் இரண்டாவது தெலுங்கு படம்! | பெண்கள் பாதுகாப்பு - விஜய் வெளியிட்ட அறிக்கை | பேபி ஜான் - கவர்ச்சி புயலாக உருவெடுத்த கீர்த்தி சுரேஷ் | சீனாவில் மஹாராஜா ரிலீஸ் : முன்பதிவு எப்படி | காதல் படங்கள் குறைந்து விட்டது : கார்த்தி வருத்தம் |
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதான இவர் கடந்த மாதம் 29ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதில் புனித்தின் மரணம் கர்நாடக மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியது.
அவரது நினைவிடம் அமைந்துள்ள கன்டீரவா ஸ்டூடியோவுக்கு கடந்த 17 நாட்களாக ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் புனித் ராஜ்குமாருக்கு இரங்கல் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு புனித் ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல நிறைய மக்கள் பணி செய்தவர். அதனால் தான் அவருக்கு அரசு மரியாதை தரப்பட்டது, புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தை அரசு பராமரிக்கும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய எதிர்கட்சி தலைவர் சித்தராமய்யா புனித் ராஜ்குமாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும், என்றார்.