சமீபத்தில் வெளியான அண்ணாத்த, ஜெய்பீம் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்திருக்கிறார், பிரகாஷ்ராஜ். ஐதராபத்தில் தற்போது குடும்பத்துடன் வசிக்கும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் தொண்டையில் இன்பெக்சன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஒரு வாரம் வரை அதிகம் பேசாமல் இருப்பது நல்லது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது : ‛‛டாக்டர்கள் முழு பரிசோதனை செய்தனர். நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய குரல் வளைக்கு மட்டும் தான் ஒரு வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது . அதனால் நான் மவுன விரதம் இருக்க போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.