'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல காமிக்ஸ் நிறுவனமான மார்வெல் தங்களது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை கொண்டு திரைப்படம் தயாரிக்க தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 23 சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டுள்ளது.
தற்போது வெப் சீரிஸ் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. வாண்டாவிஷன், லோகி, பால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட தொடர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக 'ஹாக் ஐ' வெப் தொடர் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு 11 வெப் சீரிஸ்களை வெளியிடப்போவதாக அறித்து அந்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மூன் லைட், அகதா: ஹவுஸ் ஆப் டார்க்னெஸ், அயர்ன்ஹார்ட், ஸ்பைடர்மேன் - ப்ரெஷ்மேன் இயர், மார்வெல் ஸாம்பீஸ், மிஸ்.மார்வெல், ஷி ஹல்க், எக்கோ, எக்ஸ் - மென் 97, சீக்ரெட் இன்வேசன், ஐயாம் க்ரூட், வாட் இஃப் சீசன் 2 ஆகியவையே அந்த தொடர்கள். இவற்றில் பெரும்பாலானவை அனிமேஷன் தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.