எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் |

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை தான் இயக்க இருந்தார் சிவா. ஆனால் எதிர்பாராதவிதமாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யா படத்தை தள்ளிவைத்து விட்டு ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கினார். தற்போது அப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக விஜய் படத்தை சிவா இயக்குவது போன்ற செய்திகள் வெளியாகின. ஆனால் சூர்யா நடிக்கும் படத்தைதான் அவர் அடுத்தபடியாக இயக்கப்போவதாக தற்போது புதிய செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சூர்யாவிடத்தில் சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்த அதே கதையை இயக்கப்போகிறாராம் சிவா.
இதற்கு முன்பு பேரழகன், வேல், வாரணம் ஆயிரம், மாற்றான் போன்ற படங்களில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்போது சிவா இயக்கும் படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.




