இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? | ஐந்து வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் : விஜய் பட நாயகி ஓபன் டாக் | தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! |
டாக்டர் படத்தை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் டான். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நேற்று படத்தின் டப்பிங்கை முடித்தார் சிவகார்த்திகேயன். இதுப்பற்றி, ‛‛அடாது மழையிலும் விடாது டப்பிங் நிறைவு'' என தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கல்லூரி மாணவர் போன்று சிவகார்த்திகேயன் சற்றே உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இந்த படமே கல்லூரி கதைக்களத்தில் மாணவர்கள் - பேராசிரியர்கள் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து கலகலப்பாக உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.