விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பிரகதி, தமிழ் படங்களில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார். சமீப காலங்களில் சில தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக் கிளி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரகதி, தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து அவரது சோஷியல் மீடியா பதிவுகளையும் தமிழ் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.
பிரகதி அவ்வப்போது போட்டோஷூட்களையும் வொர்க் அவுட் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வந்தார். தற்போது 45 வயதான பிரகதி மிகவும் கவர்ச்சியான உடையணிந்து ஒரு கேட் வாக் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் அந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள 'இந்த வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா?' என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.