விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் |

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்து வெளியான படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு 2019ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதினை கடந்த மாதம் 25-ஆம் தேதி வெங்கையா நாயுடுவிடம் பெற்றார்.
அதையடுத்து அந்த விருது பெறும்போது தனக்கு கொடுக்கப்பட்ட கடிதத்துடன் சென்னை திரும்பிய விஜய் சேதுபதி, அதை சூப்பர் டீலக்ஸ் பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கி அவர் படித்து விட்டு விஜய் சேதுபதியை வாழ்த்துகிறார். அதற்கு விஜய் நன்றி சொல்கிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
அதோடு, ஷில்பா கேரக்டரில் விஜய் சேதுபதி தான் சொன்னது மட்டுமின்றி சொல்லாத விசயங்களையும் சேர்த்து சிறப்பாக நடித்து தன்னை இம்ப்ரஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.




