புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
இயக்குனர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இயக்கிய தியா படத்தில் நாயகனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் நாக சவுர்யா. கடந்த வாரம் இவர் நடித்த வருடு காவலேன்னு என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் இவரது பண்ணை வீட்டில் சூதாட்டம் ஆடியதாக சுமார் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் அங்கு போலீஸார் சோதனை செய்தபோது சூதாட்ட விளையாட்டுக்களில் சுமார் 25 பேர் பணம் கட்டி ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து ரொக்கமாக 25 லட்சம் வரை போலீசார் பறிமுதல் செய்தனராம்.
விசாரணையில் அந்த பண்ணை வீடு நடிகர் நாக சவுர்யாவுடையது என்பது தெரிய வந்துள்ளதாம். அதேசமயம் அது அவரது சொந்த பண்ணை வீடு அல்ல என்றும் ஒரு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒருவருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டை நாக சவுர்யா லீஸுக்கு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இதுகுறித்து நாக சவுர்யா எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.