அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளை தியேட்டர்களில் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', விஷால், ஆர்யா நடித்த 'எனிமி', ஓடிடி தளத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்த 'எம்ஜிஆர் மகன்' ஆகிய படங்கள் வெளியாகின்றன. சூர்யா நடித்த 'ஜெய் பீம்' நேற்றே ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது.
இந்நிலையில் 'ஆபரேஷன் ஜுஜுபி' என்ற படமும் நாளை தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இரண்டு பெரிய படங்களுக்கு மத்தியில் இந்த சிறிய படமும் தைரியமாக வருகிறது.
இந்தப் படத்தை அருண்காந்த் தயாரித்து, இசையமைத்து இயக்கியிருகிறார், சாம்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் வினோதினி வைத்யநாதன், படவா கோபி, மனோபாலா, சந்தானபாரதி, வையாபுரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அரசியல் பேன்டஸி படமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்களாம். இப்படம் வெளியாவது பற்றிய அறிவிப்பை சாம்ஸ், “அப்பாடா, ஒரு வழியா இறங்கியாச்சு, இனி, முடிவு மக்கள் கைகளில்...நடப்பவை நன்மைக்கே,” என பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.