மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதையடுத்து அவரது புதிய படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக இது உருவாகிறது. இந்தப்படத்தின் கதை குறித்தும் படத்தின் அப்டேட் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வம்சி, ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
“நான் விஜய்யின் எளிமையை ரசிப்பவன்.. ஆனால் இந்தப்படத்தின் கதையை விஜய்க்கு இருக்கும் மாஸ் பவரை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளேன்.. அதேசமயம் இது அரசியல் படமல்ல.. படம் முழுதும் உணர்ச்சிகரமாக இருக்கும். அடுத்த மாதம் இறுதியில் இருந்து படம் குறித்த அப்டேட் தகவல்கள் உங்களை தேடி வரும்.. அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்” என கூறியுள்ளார் வம்சி பைடிப்பள்ளி.