'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விக்ரம்பிரபு, வாணிபோஜன் நடிக்கும் ‛பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் கன்னட நடிகர் தனன்ஜெயா வில்லனாக நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார். இப்படம் மூலம் சாகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
விக்ரம் பிரபு பேட்டி: ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்கள் என்பதை ஒரு இயக்குனராக இல்லாமல், ரசிகராக இருந்து பார்த்து காட்சிகளை இயக்குனர் அமைத்துள்ளார். வாணிபோஜனிடம் எப்போதுமே ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கும். எந்நேரமும் சிரித்த முகமாகவே இருப்பார். ரசிகர்களுக்கு வித்தியாசமான ஆக்ஷன் காத்திருக்கிறது என்றார்.
வாணிபோஜன் கூறுகையில், ‛‛பெரிய ஸ்டார் குடும்பத்தில் இருந்து வந்த விக்ரம் பிரபு எப்படி இருப்பாரோ என பயந்தேன். ஆனால் அவர் அன்பாக பழகினார். எந்த பந்தாவும் இல்லை. காதல் காட்சிகளில் கூட கேட்டு தான் நடித்தார்,'' என்றார்.