2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தென்னிந்திய நட்சத்திரங்களாக இருந்தாலும் சிலர் மும்பையில் செட்டிலாவது தான் தற்போதைய பேஷனாக உள்ளது. ஏற்கெனவே ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். ராஷ்மிகாக மந்தனா சமீபத்தில் புதிய வீடு ஒன்றை மும்பையில் வாங்கினார். தற்போது 'பீஸ்ட்' படக் கதாநாயகி மும்பையில் வீடு வாங்கியுள்ளார்.
அந்த வீட்டில் நடைபெறும் வேலைகளை அவர் மேற்பார்வையிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். “எனது கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா குடும்பத்தினர் மும்பையில் செட்டிலாகி உள்ளனர். பூஜாவின் அம்மா தான் தற்போது வீட்டின் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்து வருகிறாராம்.
பூஜா ஹெக்டே தமிழில் 'பீஸ்ட்' படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்கப் போகிறார். தெலுங்கில் நடித்துள்ள 'ராதே ஷ்யாம், ஆச்சார்யா' விரைவில் வெளிவர உள்ளன.