'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சர்வதேச டிவி ஷோவான 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்பை ஆரம்பித்தது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள். சில வாரங்களுக்குப் பிறகு நிகழ்ச்சிக்கு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னாவை அந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது தமன்னா தெலுங்கு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தமன்னாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பள பாக்கி உள்ளதாலும், தயாரிப்பு நிறுவனத்தின் தொழில்முறையற்ற ஒழுக்கம் காரணமாகவும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும் அளவிற்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார். ஒரே இரவிலேயே அவருடனான தொடர்புகளை அவர்கள் துண்டித்துவிட்டார்கள். அதனால்தான் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.