'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வட இந்தியாவில் 'யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்' ஆகிய புண்ணிய தலங்களுக்கு விஜயம் செய்யும் 'சர் தம் யாத்ரா' என்பது பிரபலமான ஒன்று.
நடிகை சமந்தா அந்த 'சர் தம் யாத்ரா'வை கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் மேற்கொண்டார்.
தற்போது அந்த யாத்திரையை நிறைவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “ஒரு அற்புதமான யாத்திரை நிறைவு பெற்றது 'சர் தம் யாத்ரா'. ஹிமாலயா மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. மகாபாரதத்தைப் படித்த போது, இந்த உலகின் சொர்க்கமான கடவுள்களின் இருப்பிடமான அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் எதிர்பார்த்தது எல்லாம் நடந்துவிட்டது. எனது இதயத்தில் ஹிமாலயாவுக்கு எப்போதுமே சிறப்பான இடம் உண்டு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காதல் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பின் சமந்தா வெளியில் சென்ற முதல் இடம் இது.