‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்புச் செய்தியாக சமந்தா, நாக சைதன்யா பிரிவு இருந்து வந்தது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார் சமந்தா. தற்போது தனது தோழியுடன் ரிஷிகேஷ் சுற்றுப்பயணத்திற்கச் சென்றுள்ளார். ஷில்பா ரெட்டி என்ற சமந்தாவின் தோழி அந்த சுற்றுப் பயணம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“டேக் ஆப், முதலில் யமுனோத்ரி” என அவர் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் சர் தம் யாத்ரா என்பது இந்துக்கள் அதிகம் செல்லும் ஒரு யாத்திரை. இமாலய மலைப் பிரதேசங்களான கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குச் செல்லும் யாத்திரை அது. உத்தரகாண்ட்டில் கடும் மழை பெய்ததால் இன்னும் பத்ரிநாத் செல்வதற்கான சாலைகள் திறக்கப்படவில்லை.
கிறிஸ்துவராக இருந்தாலும் சமந்தா இந்து மதக் கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். திருப்பதிக்கு அடிக்கடி சென்று வருவார். தற்போது வட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.