ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? | பிஎம்டபுள்யூ கார் கொடுத்தார் ஜீவா : முத்தம் கொடுத்தார் ஆர்.பி.சவுத்ரி | சிவகார்த்திகேயன் புதிய படத்தின் இயக்குனர் இவரா? | 29 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |

டாப்ஸீ கதாநாயகியாக நடித்த 'ராஷ்மி ராக்கெட்' கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தமிழ் சினிமா இயக்குனரான நந்தா பெரியசாமி கதை எழுதியுள்ளார். இப்படத்தை பாலிவுட் விமர்சகர்களும், ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன. படத்திற்கு நல்லதொரு வரவேற்பும் கிடைத்துள்ளது. ஆனால், இந்தப் படம் குறித்து இங்குள்ளவர்கள் கண்டு கொள்ளவில்லை என நந்தா பெரிய சாமி வேதனையுடன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சிக்காக இன்று அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே சினிமாக்கார்ர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை. எந்த மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை. கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்...வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.
நந்தா பெரியசாமி தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.