''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
உலக சினிமாவின் உயரிய விருதாக ஆஸ்கர் இருப்பது போன்று, இந்திய சினிமாவின் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தையாக போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து சிவாஜியும், கே.பாலச்சந்தரும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக விருது விழா நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் வருகிற 25ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.
ரஜினியுடன், சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதியும், டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி விருதையும், நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெறுகிறார்கள்.