சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. கடந்த ஆண்டு போதை பொருள் விற்பனை மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.
அப்படி இருந்தும் தொடர்ந்து சர்சையில் சிக்குகிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரு கால் டாக்சி டிரைவர் சஞ்சனா மீது போலீசில் புகார் அளித்தார். கார் பயணத்தில் தன்னை ஆபாசமாக திட்டியதாக அவர் புகாரில் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது நண்பர் ராகுல் டான்சி என்பவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக என் நண்பர் ராகுல் டான்சி கூறியிருந்தார். அவரது பேச்சை நம்பி, கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்தேன்.
ராகுல் டான்சி உள்பட 3 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எந்தவித வட்டியையும் கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகின்றனர். ராகுல் டான்சி உள்ளிட்டோர் என் பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். என் கவுரவத்தை பாதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க இந்திரா நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.