தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் | மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை | 'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'டாக்டர்'. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு மக்களை தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவழைத்த படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது. படம் வெளிவந்து பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
50 சதவீத இருக்கைகளில் இந்த அளவிற்கு வசூல் என்பது மிகவும் ஆச்சரியம் என மிரண்டு கிடக்கிறது தமிழ்த் திரையுலகம். கொரோனா முதல் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது விஜய்யின் 'மாஸ்டர்' படம்தான் தியேட்டர்களைக் காப்பாற்றியது. அதற்குப் பிறகு வந்த படங்களில் 'சுல்தான், கர்ணன்' படங்கள் ஓரளவிற்கு வசூலித்தது. இப்படங்கள் நல்ல வசூலைப் பெறுவதற்கு முன்பாக கொரானோ இரண்டாவது அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அலைக்குப் பிறகு 'டாக்டர்' படம் வசூல் என்பது 'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு அதிக வசூல் என்றும் சொல்கிறார்கள். தீபாவளி வரை வேறு பெரிய படங்கள் போட்டிக்கு இல்லாத காரணத்தால் 'மாஸ்டர்' வசூலை நெருங்கினாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை என்கிறார்கள்.
'டாக்டர்' பட வெளியீட்டுச் சிக்கலில் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து படம் வெளிவர பேருதவி புரிந்த சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுத்துவிடுவார் என்றே தெரிகிறது.