ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா திரைப்படம் குறைந்த பொருட்செலவில் மிக திகிலான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியதுடன் பெரிய ஹிட்டும் கொடுத்தது. தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா இரண்டாம் பாகம் திரைப்படமும் வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது பீட்சா படத்தின் மூன்றாவது பாகமும் வெளிவர உள்ளது.
‛பீட்சா-3 தி மம்மி' என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் அஸ்வின், நடிகை பவித்ரா மாரிமுத்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் கவுரவ் நாராயணன், அபிஷேக், காளி வெங்கட், அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் அருண்ராஜ் இசையமைத்திருக்கும் பீட்சா-3 தி மம்மி படத்தை சி.வி.குமார் தயாரித்திருக்கிறார்.