திலீப் படத்தில் விஜய் புகழ் பாடிய மோகன்லால் | மம்முட்டியின் களம்காவல் படம் சர்வதேச வசூலில் புதிய சாதனை | கார் விபத்தில் நடிகை நோரா பதேஹி காயம் | மலையாள நடிகர் சீனிவாசன் மறைவு ; ரஜினிகாந்த் இரங்கல் செய்தி | மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போகும் கருப்பு படம்! | ‛டாக்ஸிக்' படத்தில் நாடியாவாக கியாரா அத்வானி! | நானிக்கு ஜோடியாகும் கயாடு லோகர்! | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! | 2025ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர்கள், டீசர்கள் | படப்பிடிப்பில் அசவுகரியம்: ராதிகா ஆப்தே வேதனை |

‛கர்ஜனை', ‛சதுரங்க வேட்டை 2', ‛ராங்கி' உள்ளிட்ட படங்களை முடித்துவிட்ட த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛பொன்னியின் செல்வம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதிதாக கதைகள் கேட்டு வந்த த்ரிஷா, வெப் சீரிஸ் ஒன்றின் கதைக்கு ஓகே சொல்லியுள்ளார். தெலுங்கில் தயாராகும் இந்த வெப் சீரிஸை சூர்யா வங்கலா இயக்கவுள்ளார். இதன் பணிகள் துவங்கப்படவுள்ளன. பிருந்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.