விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

தொண்ணூறுகளில் மலையாள திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரிஷபாவா. 54 வயதான அவர் நேற்று காலை கொச்சியில் காலமானார். கடந்த சில வருடங்களாகவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணத்தை தழுவியுள்ளார். பிரித்விராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொண்ணூறுகளில் அலட்டிக் கொள்ளாத ஹைடெக் வில்லன், டீசன்டாக வில்லத்தனம் காட்டும் அரசியல்வாதி, துரோகம் செய்யும் உயர் போலீஸ் அதிகாரி போன்ற கேரக்டர்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்தவர் தான் நடிகர் ரிஷபாவா. 1990-ல் வெளியான இன் ஹரிஹர் நகர் படத்தில் முதல் பாகத்தில் இவர் ஏற்று நடித்த ஜான் ஹோனாய் என்கிற கதாபாத்திரம் தான் இவரை ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலப்படுத்தியது.




