'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா |

தற்போது ஆச்சார்யா படத்தை முடித்துவிட்ட சிரஞ்சீவி அடுத்ததாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப்படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இந்தக்கதைக்கு பொருத்தமான டைட்டிலை ஆலோசித்தபோது இயக்குனரும் சிரஞ்சீவியும் உட்பட அனைவருமே 'காட்பாதர்' என்கிற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தனர்.
ஆனால் அந்த டைட்டிலை ஏற்கனவே பிரபல தெலுங்கு இயக்குனர் சம்பத் நந்தி என்பவர் தனது கதைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் தனது படத்திற்கு அந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கிறது என சிரஞ்சீவியே சம்பத் நந்தியை போனில் அழைத்து பேசியுள்ளார். சிரஞ்சீவியே கேட்கும்போது அதைவிட வேறு என்ன சந்தோசம் என காட்பாதர் டைட்டிலை தருவதற்கு சம்மதித்து விட்டாராம் சம்பத் நந்தி. ஒருவழியாக டைட்டில் பிரச்சனைக்கு தீர்வு எளிதாக கிடைத்துவிட்டது.